புதன், 16 பிப்ரவரி, 2011

புதுக்கவிதைகள் -- சிறு துளிகளாய் ...... --- கொ.மா.கோ.இளங்கோ



 
 புரியாத சலனம்
----------------------------

திருவிழாவில் பார்த்த
நந்தவனம்
திகைப்பில் உறைந்திருப்பான்

ஆரம்பா பாடசாலை
அறிமுகங்கள் ஒவ்வொன்றும்
பட்டணம் திரும்பிய
பாரிஜாத மலர்களாய் தெரிகின்றன

வரவேற்ப்பு வாசனை
தனக்குள்ளவன்
கோடை பொசுக்கல் உணர்கிறான்
சிவப்பு கனகாம்பரம்
மஞ்சள் ரோஜா
வாடகை வர்ணங்களில்
பழைய அறிமுக மொட்டுக்கள்

குதிரை ராட்டினம்
சுழன்ற வேகத்தில்
பயந்த மல்லிகை இதழில்
பால் ஐஸ் சுவைத்த தடம்

கூப்பிடு தொலைவில்
தங்க தாவணியில்
லில்லி மலர்

புலகாங்கிதம் கலந்த
அவன் பார்வையில்
தேடல் ஆதிக்கங்கள்

ராட்சச சக்கரத்தில்
முகமறிந்த குறிஞ்சி
புன்னகை பகிரும்
தோழிகளுடன்

அவனது பொன்வண்டு இளமை
மகரந்தம் திருட மறுத்து
கருவண்டு போர்வையில்
மறைந்து வைரநிலைஎட்டும்

பேச துடிக்கும் புலன்கள்
கை பிசைகின்ற சூழல்
அலைக்கழிக்கிறது இன்னமும்
திருவிழா வழிப்பறி
நந்தவனம் தற்காலிகம்
சலனம் மிச்சம்

ஆண் மகன் மனசு
வந்து போகிற பறவைகளுக்கான
சரணாலயம்
எல்லா காலங்களிலும் .



02.
மனச்சுருள் மாசு!
--------------------------

இதய கூடத்தின்
சாளரம் திறந்துகொள்ள
பொசுக்கி போயிருக்கும்
உனது ஏளனம்
நினைவுக்கெட்டாமலே
உன்னிடம் உள்மனதை
திருடிக்கொண்டது உண்மை தான்
தொலைத்திருப்பேன்
கடந்து போகிற நிமிஷங்களில்
புதிதாய்.. புதிதுபுதிதாய்
இதய ஜாலங்கள்
தொலைத்ததன் காரணம்
முக்கியமாய் படவில்லை
கருப்பு அங்கி
கழற்றபட்டாலொழிய
விடியலின் விலாசம்
புதுப்பிக்கப்பட போவதில்லை
இன்னமும் என்னுள்
ஒளிந்திருக்கவில்லை நீ
விலாசம் தேட முற்படு
தண்ணீர் முத்து
எந்த சிப்பியில் அடக்கமென
அறிந்துகொள்
தெரிவி ..
காரணம் தெரியாமல்
கணக்கிறது
மனச்சுருள் .

நன்றி :  வார்ப்பு இணைய இதழ்
நாள்   : 04 .02 .2011
kmkelango@gmail.com
kelango_rahul@yahoo.com

கருத்துகள் இல்லை: