சனி, 22 பிப்ரவரி, 2014

' பால சாகித்ய புரஸ்கார் ' விருது பெற்ற குழந்தை இலக்கியங்கள் - சுகுமாரன்





 
 
தமிழ் குழந்தைகளுக்கு ,குழந்தை இலக்கிய நூல்களை அறிமுகப் படுத்தும் கடமை ஆசிரியர்,பெற்றோர்,நூலகர்,கல்வியாளர் ஆகியோருக்கு உண்டு எனும் சுகுமாரனின் கருத்தில் நான் உடன் படுகிறேன்.


 - கொ.மா.கோ.இளங்கோ

தினமணி- தமிழ்மணியில் கலாரசிகனின் பாராட்டு



கல்கி இதழில் வெளியான எனது கவிதைகள்





ஒண்ணாங்கிளாஸ்


வீட்டுப்பாடம் எழுதிமுடித்த 
வீணா குட்டியின்
நோட்டைச் சரிபார்க்கும்
வேலையினி அப்பாவுக்கு

கோணல் மாணலாக் கிறுக்கக் கூடாது
பூஜ்ஜியத்துல ஒம்பது கழியாதில்லே
மின் குஞ்சுன்னு தப்பா எழுதலாமா
புரிந்து விட்டதாய்த் தலையசைத்து
புன்னகைத்த வீணா குட்டியை   
போதும்டா கண்ணுபோய் விளையாடுஎன
வெளியேற அனுமதித்தார்

அப்பாவை அருகில் அழைத்து
உட்காரச் சொல்லி,ஒரு விளையாட்டை
இப்படித்தான் தொடங்கினாள் வீணா குட்டி
அப்பாநீ ஒண்ணாங்கிளாஸ் பையனாம்
ஒனக்கு நான் டீச்சராம்
வீட்டுப்பாடம் எழுதுன நோட்டை
விருட்டுன்னு எடுத்துட்டு வா பாக்கலாம்!”

 *****
 
                             கருணை செய் குழந்தாய்!
 சகஸ்ரநாமம் பாடி
கர்ப்பகிரகத்தைச் சுற்றிவரும்
அம்மாவின் கைபிடித்து
ஆடியசைந்து நடந்தது குழந்தை
எனக்கொரு கை தந்து
கருணை செய்வாயா என
குழந்தையைக் கேட்டு
கைக்கூப்பி நின்றார் கடவுள்
காதெட்டும் தொலைவில்  
கணீர் கணீரென ஒலித்தது
கோயில் மணி!
*****

தாமரை இதழில் வெளியான எனது கவிதை



கனவு இதழில் வந்த கவிதை