திங்கள், 21 பிப்ரவரி, 2011

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்--

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

1. வளியின் உள்ளீடற்ற ஓசை...
வளியின் ஊடுருவல்
இசைக்கான தபால் தலை
நடை, தாளம், ஜதை
அசைவு, முத்திரை, பாவனைகள்
விலாசம் நிரப்பிய கடிதங்கள்
நடனம் பட்டுவாடா
ஒலியின் உந்து காற்று
தீண்டல், தழுவல், வருடல்
உயிர்ப்பித்தல், அரவணைப்பு
உணர்வூட்டல், படர்பித்தல்
சுவாசித்தல், உலர்வித்தல்
சுடர்வித்தல், நடைப்பித்தல்
அசைவித்தல், ஒளிர்வித்தல்
சலசலப்பு, அழுவித்தல்
நெகிழ் வூட்டல், விரித்தல்
பிரித்தல், குளிர்வித்தல்
வளர்த்தல், கேட்ப்பித்தல்
தொய்வித்தல், தாழ்வித்தல்
தளிர்த்தல், பறத்தல்
பூப்பித்தல், பகுத்தல்
அனைத்தும்
வளியின் பூரண முகவரிகள்!
அண்ட அசைவின்
மைய தந்தி காற்று

வளிபுகா வழித்தடத்தில்
ஓசை உணர்கிறேன்
நான்மட்டும் !
சலசலத்து பாயும் வெள்ளம்
ஆழம் மிகுந்த நீரடியுள்
தங்கி உருளும்
கூழாங்கற்களின்
உரசல் ஓசை
கேட்கிறது காதுகளுள்...
காற்றின் ஏமாற்றம் கலந்து!

2. அன்பிலார் எல்லாம் தூண்டில் !
சுரம் தப்பிய மனசு
அறிந்திராது வீழும்
வேண்டப்பட்ட பிசாசுகள்
வீசிய தூண்டிலில்

செலவாகி தவிக்கும்
வாழ்வின் எச்சம்
தக்கை உருளையேறி மிதக்க
தொடர் நெருங்கும் உறுத்தல்கள்
நட்புப் பேழையுள்
விஷம் துப்பி நிரப்பும்

அறியா காலம்
வஞ்சக சூழல்
பொன்னினிமை பொய்முகங்கள்
உயிர் மென்மை உறிந்து மகிழும்
அட்டை குழுக்கள்
அவசரமாய் இருள் புகுத்த
தன்னிலை உணரா சக்தி தோய்ந்து
வீழுகிற உள்ளம்
தண்டுவடம் கிழிபட்டு
தூண்டில் சிக்கும்

காயம் பதிந்த ஜீவன்
யாரும் இலா சூழலில்
தனிமை பருகி
குற்றம் பதியா கோப்பின்
நகல் துடைத்து
மீண்டும் மலர்ந்த நாட்களை
சுவாசிக்க தயாராகும்
உயிர் ஒட்டிக்கொள்ளும் ...
இனி
உதிர்ந்த செதில்கள்.

Kelango_rahul@yahoo.com



' பதிவுகள் ' இணைய இதழில் வெளியான கவிதைகள் .
மார்ச் ' 2011




சுதந்திரம் தாத்தாவுக்கு வாய்க்கரிசி !

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 


செங்கதிரோன்
சிறுவாணி
கொல்லையில்
துயில்
எழுந்த நண்பகல்
புறப்பட
தயாராகும்
'சுதந்திரம்' தாத்தாவின்
இறுதி
ஊர்வலம்
மாலை
, தப்பட்ட மரியாதை சகா
மனையுள் மார்தட்டி ஓலமிடும் 
மாதர் சங்கமத்தை விஞ்சி  
பெருமகன் பேணிய 
பண்ணை புறாக்களின்
'பொளக்''பொளக்''பொளக்' 

கண்ணீரை பீய்ச்சி வரவழைக்கும்
 

யதார்த்தம் சரிந்த சமுகப் பிணியுள்
'மனிதம்' சுரம் பிடித்த
ஆர்மோனியம்  

ஆசை நட்டு வளர்த்த அமைதியின்  
அச்சாணிப் பூக்கள் 
 அறுபத்து நான்கு புறாக்கள் 
எதிர் வரும் நாட்களில்  
யார் கூடும் சாவடியில்
மனு சேர்ப்பிக்கலாகும்
 

மீண்டுமொரு முகவரிக்காக...  
நெல் வீசி கொஞ்சிப் பழக  
நெஞ்சங்களின் பற்றாக்குறையல்லவே!
 

காடு சேர்ந்தார் தாத்தா
காரியங்கள் நடந்தேறின
படியேற்றிய பாதம்
பணிந்தனர் பலர்  

தகன வளர்ப்பு தயார்
வாக்கின் நம்பிக்கைக்கு  

வாய்க்கரிசி மணிகள்  
இதயம் பிரிந்த ஒரு துளி ரத்தம்  
எங்கோ கசிந்து மடியும் 
 இருள் கவ்விய வானம்  
எழத்துடித்த வேளள கண்ணில் பட்டது...  
சாம்பல் நிற புறாவொன்று
அலகு நிறைய
குருமணி குவியலோடு
!




நன்றி :  ' கீற்று ' இணைய இதழ்








துக்கமெனும் நாய்க்குட்டி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 


மனதுக்கு பக்கம்
நிறைவாய்
மயங்கிய நிலையில்
வால் சுருட்டி கண் அயரும்
துக்கம்
நாய் குட்டியை நினைவுபடுத்தும்.
கூர் உச்சி மலையில்
ஈக்களை புறமகற்றி
தேன் துளி சுவைப்பதில்
சுகம் வகுப்படுமாயின்
பிரதி வேளை
பற்றுதலோடு வாழ்ந்து காட்டுவேன்
சின்ன சின்ன ஆறுதல்கள்
ரொட்டித் துண்டுகளாய்...
துக்க நாய் குட்டி
இன்னமும் முன்னேறி
மனதின் அருகாமையில்
எச்சில் வடித்தபடி!
- கொ.மா.கோ.இளங்கோ ( kmkelango@gmail.com)இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்






நன்றி :  ' கீற்று ' இணைய இதழ்





வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2011-01-01 


picture for poem
பதுக்கிய அதிர்வுகள்
கொ.மா.கோ.இளங்கோ


இவரின் பிற கவிதைகள்
 


பதுக்கிய அதிர்வுகள்
-----------------------------


யாரும் அறியாமல்
பதுக்கி வைத்திருக்கிறான்
அவனுக்கு மட்டுமே விளங்கும்
அன்பு அதிர்வுகளை


மிதிவண்டி காதைக்குள்
நளன் எனக்கொண்டன்
புறநகர் பள்ளியில்
பத்தை எட்டிய
தமயந்தி


கண்கள் பாய்ச்சி
கைகள் பறக்கவிட்டு
காதல் காற்றின் அகம் சுவாசித்து
இதழ்கள் எச்சில் விழுங்கிய நாட்கள்


பேருந்தை துரத்தி துரத்தி
இணைப்பு அறுந்துபோன மிதிவண்டி
கனவு கண்ட மறுநாள்
காத்திருக்கும் அவள்
'கிணிங் ''கிணிங் ' சவாரிக்காக


தொடர்ந்தனர்
தொடர்ந்தது
வசந்தத்திற்கு பின்பு துரத்திய காலம்
துருவேற்றியது அன்பில்


காற்றிலா சக்கரத்து நடுவில்
காய்ந்து கிடககிறானவன்


யாரும் அறியாமல்
பதுக்கி வைத்திருக்கிறான்
அவனுக்கு மட்டுமே விளங்கும்
அன்பு அதிர்வுகளை
வண்டி சக்கரத்தில் மிஞ்சியிருக்கும்
முப்பத்தேழு ஆரங்களுக்குள் .


நன்றி :  ' வார்ப்பு  ' இணைய இதழ்

கருத்துகள் இல்லை: